Tuesday, February 07, 2012

லெப்.கேணல் கௌசல்யன் மற்றும் மாமனிதர் சந்திரநேருவின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்!

பொலநறுவை மாவட்டம் வெலிகந்தைப் பகுதியில் 07.02.2005 அன்று, சிறிலங்கா படையினராலும், தேசவிரோதிகளாலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கௌசல்யன் உட்பட்ட மாவீரர்களினதும், மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் அவர்களினதும் ஏழாம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
வன்னியில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றிற்காகச் சென்று விட்டு மட்டக்களப்பிற்குத் திரும்பிவரும்வேளை சிறிலங்கா படையினர் மற்றும் தேசவிரோதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் லெப்.கேணல் கௌசல்யன் அவர்களுடன் மேஜர் புகழன் (சிவலிங்கம் சுரேஷ்), மேஜர் செந்தமிழன் (தம்பிராசா கந்தசாமி), 2ம் லெப்.விதிமாறன் (சிவபாதம் மதன் ) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.


இதன்போது படுகாயமடைந்த மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு மருத்துவமனையில் உயிரிழந்தார். இவர்கள் பயணித்த ஊர்தி ஓட்டிச்சென்ற ஊர்தி ஓட்டுனர் விவேகானந்தமூர்த்தி என்பவரும் இதன்போது கொல்லப்பட்டார். தமிழீழ விடுதலைக்காய் தம்மை அர்ப்பணித்து அந்த விடுதலைக்கான பயணத்தில் விழிமூடிய இப்புனிதர்களை இன்றைய நாளில் நினைவு கூருகிறோம்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.