Saturday, February 25, 2012

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேசம் சுமத்தும் குற்றங்கள் ஆதாரமற்றவை: ஹிஸ்புல்லா

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேசம் சுமத்தும் குற்றங்கள் ஆதரமற்றவையென தெரிவித்துள்ள சிறுவர் அபிவிருத்தி,மகளிர் விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மனித உரிமை மீறல் மாநாட்டில் இலங்கை பற்றிய நியாயங்களே அதிகமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவாவில் 27 ஆம் திகதி இடம் பெறும் மனித உரிமை கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் இலங்கைக் குழுவின் பிரதம குழுவில் பங்கெடுக்கவுள்ள பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா அங்கு பயணமாவதற்கு முன்னர் விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் சமாதான சூழலை ஏற்படுத்தியுள்ளார்.இதனைத் தாங்கிக் கொள்ள முடியாத சர்வதேச சக்திகள் இட்டுக்கட்டப்பட்ட கதைகளைப் புனைந்து போலிப் பிரசாரங்களை முன்னெடுத்துவருகின்றது.

இது அசத்தியம் என்பதால் அதற்கு எதிராக நியாயத்தின் பக்கம் பலமான ஆதாரங்களை எமது அரசு கொண்டுள்ளது என்றும் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

பிரதி அமைச்சருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினமும் பயணமானார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.