Saturday, February 25, 2012

வெள்ளைக் கொடி இரகசியங்களை கக்கினார் நம்பியார்!

ஐக்கிய நாடுகள் சபையை சேர்ந்த மிக உயர் அதிகாரிகளில் ஒருவரான விஜய் நம்பியார் வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பாக சில விபரங்களை வெளிப்படுத்தி உள்ளார்.

இவர் இன்னர் சிற்றி பிரஸ் பத்திரிகைக்கு கருத்துக் கூறியபோதே சில தகவல்களை கூறி இருக்கின்றார்.

இவர் இப்பேட்டியில் தெரிவித்து இருப்பவை வருமாறு:
-பிரித்தானிய ஊடகவியலாளர் மேரி கொல்வின் கடந்த வாரம் சிரியாவில் கொல்லப்பட்டு உள்ளார் அல்லவா? இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் கொல்வின் என்னுடன் தொடர்பில் இருந்து உள்ளார். புலிகள் இயக்க தலைவர்கள் சிலரின் சரண் அடைதல் தொடர்பாக மத்தியஸ்தத்தில் ஈடுபட முயன்று இருந்தார்.

என்னுடன் பேசினார். நான் அவரை இலங்கை செல்ல சொன்னேன். அமெரிக்க தூதுவராக இருந்த ரொபேட் பிளேக்குடன் இது சம்பந்தமாக இரு தடவைகள் தொடர்பு கொண்டேன்.

நானும் கொல்வினும் இலங்கை வர திட்டமிட்டு இருந்தோம். ஐ.சி.ஆர்.சியை சேர்ந்தவர்கள் கடல்வழியாக வர இயலாது இருந்தது.
ஆனால் நாம் இலங்கை வருகின்றமைக்கான அனுமதியை இலங்கை அரசு நிராகரித்து விட்டது. இதனால் எம்மால் எதுவும் செய்ய முடியாமல் போய் விட்டது.

சாட்சியங்கள் இருக்கவில்லை. சரண் அடைய முயன்றவர்கள் இறந்து போனார்கள்.

நடுநிசியில் எனக்கு கொல்வின் தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு இருந்தார். இருவர் சரண் அடைய விரும்புகின்றனர் என்று தெரிவித்தார்.
இவர்களின் பெயர்களை நான் இப்போது மறந்து விட்டேன். ஒருவர் புலிகளின் சமாதான செயலகத்தை சேர்ந்தவர். உத்தரவாதம் வேண்டும் என்று கேட்டு இருந்திருக்கின்றனர்.

நான் ஆவன செய்து தரப்படும் என்று சொல்லி இருந்தேன். நான் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி ஆகியோருடன் பேசினேன்.
சரண் அடைகின்ற ஏனையோரைப் போலவே இருவரும் நடத்தப்படுவார்கள் என்று வாக்குறுதி வழங்கினர். ஆனால் அப்படி நடக்கவில்லை.

சொந்த ஆட்களாலேயே (புலிகளாலேயே) இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கலாம். இதைத்தான் பசில் ராஜபக்ஸவும் சொன்னார். பிரதானமாக மஹிந்த ராஜபக்ஸ, கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோரும் சொன்னார்கள்.

வெளிவிவகார அமைச்சுச் செயலாளராக இருந்த பாலித கோஹணவுடன் பேசி இருந்தேன்.-

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.