சென்னை பாரிமுனையில் உள்ள அர்மீனியன் தெருவில் இருக்கும் புனித மேரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் இந்தி ஆசிரியையாக பணிபுரிந்து வரும் உமாமகேஸ்வரி(43) என்பவரை அந்த பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துவரும் முகமது இர்பான் என்ற மாணவன் இன்று காலை வகுப்பறையிலேயே கழுத்தை அறுத்துக் கொலை செய்தான்.

வகுப்பறையிலேயே மாணவர் ஒருவரால் ஆசிரியை ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.