Thursday, February 09, 2012

இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் குறித்து வோஷிங்கடனில இந்தியாவுடன் பேச்சு!

 
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டு வர அமெரிக்கா தீர்மானித்துள்ள யோசனை குறித்து, இந்திய அரசாங்கத்துடன் சில சுற்றுப் பேச்சுவார்த்தைகள் வோஷிங்கடனில் அண்மையில் நடைபெற்றுள்ளது.
இதில் பிரதான பேச்சுதவார்ததையில் அமெரிக்க வெளிவிவகார ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் மற்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் ரஞ்சன் மாத்தாய் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையின் போது, அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டு வரவுள்ள யோசனையில் அடங்கிய விடயங்கள் விபரமாக இந்திய செயலாளரிடம் அறிவிக்கப்பட்டுள்ளன.

தெற்காசியாவின் அரசியல் சமநிலை மற்றும் மலைத்தீவு பிரச்சினை குறித்து அமெரிக்காவின் நிலைப்பாட்டை இந்தியாவுக்கு அறிவிக்கும் சந்தர்ப்பமாக கிளின்டன் இந்த பேச்சுவார்த்தையை பயன்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.