Friday, February 24, 2012

கிளரி மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் பார்வையாளராக கலந்துகொள்வார்?

திருமதி கிளரி கிளிங்டன் அல்லது அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறை அதியுயர்மட்ட இராஜதந்திரியொருவர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஜெனிவா அமர்வில் பார்வையாளராகக் கலந்து கொள்ளவுள்ளனர்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மார்ச் முதல் வாரத்தில் முன்வைக்கப்படும் சந்தர்ப்பத்தில் அன்றையதினம் அமெரிக்காவின் அந்த உயர்மட்ட இராஜதந்திரி பார்வையாளராகக் கலந்துகொள்வாரென்றும் - இலங்கைக்கெதிரான தீர்மானம் நிறைவேற்றப்படுவது அமெரிக்க பிரதிநிதியின் இந்த பிரசன்னம் உதவியாக இருக்குமென்றும் கொழும்பிலுள்ள மூத்த அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.