Friday, February 24, 2012

687 பேரின் தொலைபேசி உரையாடல்களை அரசாங்கம் இரகசியமாக செவிமடுக்கின்றது

இலங்கையில் 687 பேரின் தொலைபேசி உரையாடல்களை அரசாங்கம் இரகசியமாக செவிமடுத்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சினால் இவ்வாறு தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன.

124 ஆளும் கட்சி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் உரையாடல்களையும் அரசாங்கம் இரகசியமாக செவிமடுக்கின்றது.

சீன தொலைபேசி நிறுவனங்களின் ஒத்துழைப்பு இதற்காக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

பத்திரிகை ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோரின் n;தாலைபேசி உரையாடல்களும் இரகசியமாக செவிமடுக்கப்படுகின்றது.

தொலைபேசி உரையாடல்களை செவிமடுப்பதற்காக பாரியளவில் பணம் செலவிடப்படுகின்றது என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்,
இதேவேளை, உலகின் பல நாடுகள் இவ்வாறு புலனாய்வுத் தேவைகளுக்காக தொலைபேசி உரையாடல்களை இரகசியமாக செவி மடுப்பதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தகவல்களை திரட்டுவதனால் எதிர்காலத்தில் நாட்டுக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்களை தவிர்க்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.