Thursday, February 09, 2012

‘அரசியலமைப்பு மாற்றமே இனப்பிரச்சினைக்கு தீர்வு’ – தென்னாபிரிக்கா!

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக நாட்டின் அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வருமாறு சிறீலங்கா அரசாங்கத்திற்கு தென்னாபிரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் சிறீலங்கா அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணையம் வெளியிட்ட அறிக்கைக்கான பிரதிபலிப்பை இன்று விடுத்திருக்கும் தென்னாபிரிக்க வெளியுறவுத்துறை அமைச்சு, மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டோரை தண்டனைக்கு உட்படுத்துவது தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டை சிறீலங்கா அரசாங்கம் வெளியிடாததையிட்டு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அரசியல் தீர்வுக்கு உகந்த சூழலை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தோற்றுவித்து, சகல சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலமே தேசிய இனப்பிரச்சினைக்கு சிறீலங்கா அரசாங்கம் தீர்வு காண முடியும் என்றும் தென்னாபிரிக்க வெளியுறவுத்துறை அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.