Thursday, February 23, 2012

சிறிலங்காவின் போர்க்குற்றங்களின் சாட்சியான ஊடகவியலாளர் மேரி கொல்வின் சிரியாவில் படுகொலை

சிறிலங்கா படைகளின் போர்க்குற்றங்களுக்கு சாட்சியாக இருந்தவரும், போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைய முன்வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்கும் அனைத்துலக சமூகத்துக்கும் இடையில் தொடர்பாளராக செயற்பட்டவருமான லண்டன் சண்டேரைம்ஸ் ஊடகவியலாளர் மேரி கொல்வின் சிரியாவில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஹோம்ஸ் நகரில் அவர் தங்கியிருந்த வீட்டின் மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலிலேயே ஊடகவியலாளர் மேரி கொல்வினும், பிரெஞ்சு படப்பிடிப்பாளரும் கொல்லப்பட்டுள்ளனர்.

மூன்றாம்கட்ட ஈழப்போரின் இறுதிப்பகுதியில்- 2001 ஏப்ரல் மாதம் வன்னிப் பகுதி நிலவரங்கள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்றிருந்த மேரி கொல்வின், வவுனியாவில் முன்னரங்க நிலையைக் கடக்க முயன்றபோது, சிறிலங்கா இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து ஒரு கண்ணை இழந்திருந்தார்.

போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைய முன்வந்த விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் உள்ளிட்டோருடன் இவர் இறுதிவரை தொடர்பில் இருந்தவர் என்பதுடன் அதுபற்றிய உண்மைகளையும் வெளிப்படுத்தியிரந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.