Thursday, February 23, 2012

ஆலோசனைக்குழுவிலிருந்து நீக்கம்! இல்லை என்று அடம்பிடிக்கும் சிவேந்திர சில்வா!!

ஐ.நா தலைமைச் செயலாளருக்கு ஆலோசனை வழங்கும் குழுவில் உள்வாங்கப்பட்ட சவேந்திர சில்வாக்கு எதிராக மனித உரிமை அமைப்புக்கள் எதிர்ப்புக்களைத் தெரிவித்து வந்தனர்.

இந் நிலையில் எதிர்வரும் 27 ஆம் திகதி மனித உரிமை கூட்டத் தொடர் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து அந்த ஆலோசனைக் குழுவிலிருந்து தூக்கி எறியப்பட்டார் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா.

ஐநாவின் அமைதிகாக்கும் படைகள் நடவடிக்கைகளில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா பங்கேற்பதில் இருந்து விலக்கப்படுவதாக அந்தக் குழு அறிவித்துள்ளது.

ஐநாவுக்கான இலங்கையின் துணை நிரந்தரத் தூதுவரான சவேந்திர சில்வா அமைதிகாப்பு படையினரை வழங்குவதற்கான நாடுகளுக்கு எவ்வளவு நிதி வழங்குவது என்பது குறித்து ஆராயும் குழுவுக்கு ஆசிய நாடுகளின் சார்பில் நியமிக்கப்பட்டிருந்தார்.

ஆனால், இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை இராணுவத்தால் செய்யப்பட்டதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் அவருக்கும் தொடர்பு இருப்பதாக பல மனித உரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியிருந்தன.

இந்த நிலையிலேயே, ஒரு கனடிய இராஜதந்திரியால் தலைமை தாங்கப்படும் ஐநா அமைதிகாப்பு பணிகளுக்கான புதிய ஆலோசனைக்குழு சவேந்திர சில்வாவின் பங்களிப்பு தமது குழுவின் செயற்பாடுகளுக்கு '' பொருத்தமற்றது அல்லது உதவிகரமானது அல்ல'' என்று கூறி தமது நடவடிக்கைகளில் இருந்து அவர் விலக்கி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

சவேந்திர சில்வா, இந்தக் குழுவின் முதல் கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும், ஆனால் அவருடன் குழுவின் உறுப்பினர்கள் எவரும் பேசவில்லை என்றும் அவருக்கு எந்தவிதமான ஆவணங்களும் வழங்கப்படவில்லை என்று ஐநா இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தாம் தடுக்கப்பட்டதாக வெளியான செய்தியை சவேந்திரா மறுத்துள்ளார்

ஐக்கிய நாடுகள் அமைதி காப்பு படையின் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் தமது பங்களிப்பு தடைசெய்யப்பட்டதாக வெளியான தகவலை ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா மறுத்துள்ளார்.

அவ்வாறான நடவடிக்கைகளை எவையும் நேற்று இடம்பெற்ற முதல் கூட்டத்தில் இடம்பெறவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று தாம் கூட்டத்தில் பங்கேற்றதாகவும் இன்றும் நாளையும் அந்த கூட்டத்தில் தாம் பங்கேற்கவுள்ளதாகவும் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தாம், ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இருந்து தடுக்கப்பட்டதாக விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான செய்தி நிறுவனங்களே செய்தி வெளியிட்டதாகவும் சவேந்திர சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.