Wednesday, February 15, 2012

ஜனநாயக ரீதியாக மட்டுமே இந்த நாட்டில் ஆட்சியைக் கைப்பற்ற முடியுமே தவிர அடாவடித்தன வழிகளில் கைப்பற்ற முடியாது: பணிப்பகிஸ்கரிப்புகாரர்கள் மீது மேர்வின் சீற்றம்!

பணிப்பகிஸ்பரிப்பு போராட்டங்களிற்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். வேலை நிறுத்தப் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் போது சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் மேலும் தெரிவித்துள்ளார்.
தனியார் பஸ் உரிமையாளர்கள் நடத்திய போராட்டத்திற்கு எதிராக பாதுகாப்புச் செயலாளர் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படாவிட்டால் தொடர்ந்தும் அரசாங்கத்தின் பங்குதாரராக என்னால் கடமையாற்ற முடியாது. மேலும்நாட்டின் உள்விவகாரங்களில் அமெரிக்காதலையீடுசெய்வதனை அனுமதிக்கமுடியாது.

இலங்கைக் கடற்பரப்பில் எண்ணெய் வளம் இருப்பதனை அறிந்து கொண்ட அமெரிக்கா, நெருக்கடிகளை கொடுத்து நாட்டின் நிர்வாகக் கட்டமையை சீர்குலைக்க முயற்சிக்கின்றது. ஜனநாயக ரீதியாக மட்டுமே இந்த நாட்டில் ஆட்சியைக் கைப்பற்ற முடியுமே தவிர அடாவடித்தன வழிகளில் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என அமைச்சர் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.