Wednesday, February 15, 2012

13ஆவது திருத்தத்திலிருந்து காணி பொலிஸ் அதிகாரங்களை உடனடியாக இரத்துச் செய்க! அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து ஈழம் அமைக்கப்போவதாக கூறுகிறார் குணதாச அமரசேகர.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்க்கும் அமெரிக்காவின் சதி நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர 13ஆவது திருத்தத்திலிருந்து காணி பொலிஸ் அதிகாரங்களை உடனடியாக இரத்துச் செய்ய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்திருப்பதாவது:

ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கும் எனத் தெரிவித்துள்ளமையானது ஆச்சரியப்பட வேண்டிய விடயமல்ல. இனப்பிரச்சினை இங்கில்லை, பயங்கரவாதமே இருக்கின்றது என்பதை அன்று அமெரிக்கா ஏற்க மறுத்தது. ஆனால் இன்று தனி ஈழத்தை அமெரிக்கா, இந்தியாவின் தலைமையில் உருவாக்க முனைந்த பிரபாகரனும் பயங்கரவாதம் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டது. இதனால் இன்று இதனை அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து எம் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை யுத்தக் குற்றங்களையும் சுமத்தி நிறைவேற்றிக் கொள்ள முனைகின்றன.

அத்தோடு 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தாவிட்டால் ஐ.நா.வின் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதாகவும் அச்சுறுத்தல் விடுக்கின்றது. இவ்வாறு அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை இல்லாதொழித்துக் கவிழ்ப்பதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது.

எனவே அமெரிக்கா, இந்தியா அரசியல் பயங்கரவாதிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து முன்னெடுக்கும் சதித்திட்டத்துக்கு முகம்கொடுக்க அரசாங்கம் தயாராக வேண்டும். அத்தோடு உடனடியாக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திலுள்ள காணி பொலிஸ் அதிகாரங்களை இரத்துச் செய்ய வேண்டும். அதன்பின்னர் இத் திருத்தத்தை முற்றாக நீக்க வேண்டும் என்றார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.