Wednesday, February 15, 2012

நாம் மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றோம் - தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்பது எதற்காக? பிளேக்கிடம் கேட்டாராம் மஹிந்த ராஜபக்ஷ.

மேற்குலகம் எமக்கு தொடர்ந்தும் அழுத்தம் தருகின்றன அது ஏன்? இவ்வாறு கேட்டார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அமெரிக்க குழுவினரை நேற்று சந்திக்கும்போதே மேற்கண்டவாறு கேட்டுள்ளார். இலங்கையில் மனித உரிமையை நிலைநாட்டுவதில் நாம் மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றோம்.
இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதில் வெற்றி பெற்றுள்ளோம். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது குறித்து தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறெல்லாம் மேற்கொண்ட போதிலும் மேற்குலக நாடுகள் எமக்கு அநீதியையே இழைக்கின்றன. மேற்குலக நாடுகளுடன் நட்புறவைப் பேணிவரும் எமக்கு அந்நாடுகள் தொடர்ச்சியாக அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றன, அநீதி இழைக்கின்றன. என்று அவர் குறிப்பிட்டார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.