Wednesday, February 15, 2012

யுரேனியம் செறிவூட்டலின் நேரடிக் காட்சிகள் வெளியீடு: உலக நாடுகள் அதிர்ச்சி

யுரேனியம் செறிவூட்டும் பணியில் ஈரான் நாடு அடைந்துள்ள முன்னேற்றம் குறித்த காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பியதால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகில் போர்டோ பகுதியில் பூமிக்கடியில் மிக மிக பாதுகாப்பான முறையில் அணு ஆயுதங்கள் தயாரிக்க உதவும் யுரேனியம் செறிவூட்டும் பணியை ரகசியமான மலைப்பகுதியில் ஈரான் நடத்தி வந்தது.

இதற்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் யுரேனியம் செறிவூட்டும் பணியில் தங்கள் நாடு அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும், செறிவூட்டுதலுக்கு பயன்படும் யுரேனிய பிளேட்டுகளை பொருத்தும் காட்சிகளையும் ஈரான் நாட்டின் தேசிய தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

இப்பணிகளை அந்நாட்டின் ஜனாதிபதி அகமதின்ஜாட் பார்வையிட்டார். அவருடன் ஈரான் அணு விஞ்ஞானிகள் உடன் இருந்தனர். ஈரானின் இந்த செயல் உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.





ஈரான் யுரேனியம் செறிவூட்டும் பணியை வெளிப்படையாக ஆரம்பித்திருப்பது அமெரிக்காவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானை உலக நாடுகள் தனிமைப்படுத்த வேண்டும் என ஒபாமா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே மற்றொரு அதிர்ச்சியாக, 6 ஐரோப்பிய நாடுகளுக்கு பெட்ரோலிய சப்ளையை ஈரான் நிறுத்தியுள்ளது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதால் அந்நாட்டிலிருந்து பெட்ரோல் இறக்குமதியை நிறுத்தப் போவதாக ஐரோப்பிய யூனியன் நாடுகள் அறிவித்திருந்தன.

இந்நிலையில் அதற்கு முன்பாகவே ஈரான் தனது பெட்ரோல் சப்ளையை நிறுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.





0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.