Wednesday, February 15, 2012

600 கி.மீ தூரத்தை கடந்து 18 ஆவது நாளாகத் தொடரும் நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைபயணம்!

உலகத் தமிழ்ர்களின் ஒருமித்த குரலாக சர்வதேசத்திடம் நீதிகேட்கும் "நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைபயணம்" இன்று 600 கி.மீ தூரத்தைக் கடந்துள்ளது. கடந்த மாதம் 28 ஆம் திகதி லண்டனிலிருந்து ஆரம்பமான இந்த மனிதநேய நடைபயணம் 18 ஆவது நாளான நேற்றையதினம் (14-02-12)600 கி,மீ தூரத்தை கடந்து பிரான்ஸ் நாட்டின் Ravi�res எனும் நகரை சென்றடைந்துள்ளது.
நேற்றையதினம் காலை Tonnerre எனும் பகுதியில் இருந்து 10:15 மணிக்கு ஆரம்பமான இந்த நடைபயணம் 25.9 கிலோமீற்றர் தூரத்தை கடந்து Ravi�res எனும் இடத்தை மாலை 6:45 மணிக்கு சென்றடைந்தது.
உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் மக்கள் அனைவரது சார்பிலும் தமிழ்ர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளுக்கு நீதிகேட்டும், தாயகத்தில் தமிழர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டுத்தரும்படியும் கோரி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கூட்டத்தொடர் ஆரம்பமாகும் முதன்நாளான எதிர்வரும் 27.02.2012 திங்கட்கிழமை அன்று ஜெனீவா சென்றடையவுள்ளது.

அன்றைய தினம் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கியனாடுகள் சபை புன்றலில் "ஈகப்பேரொளி" முருகதாசன் தீக்குழித்து நீதிகேட்ட அதே திடலில் மாபெரும் மக்கள் ஒன்றுகூடலும் இடம்பெறவுள்ளதால் அன்றைய தினம் புலம்பெயர்ன்துவாழும் தமிழ்ர்கள் அனைவரையும் அங்கு ஒன்றுகூடுமாறும் நடைபயண மேற்கொண்டுள்ள சிவச்சந்திரன், மற்றும் ஜெயசங்கர் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.









0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.