Wednesday, February 01, 2012

இந்தியாவுக்கு வரும் எங்களது உறவுகள் - அமைச்சர்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்! மைத்துனர் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் ஜெயலலிதாவிடம் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள்.

இந்தியாவுக்கு வரும் எங்களது உறவுகள், அமைச்சர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது மைத்துனரும் தொழிலதிபருமான திருக்குமார் நடேசன் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி தெரிவிக்கையில் பிரதி அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவை திருமணம் முடித்ததாலேயே தான் தாக்குதலுக்கு உள்ளானதாக திருக்குமார் நடேசன் கூறியதாகவும் தெரிவித்தார்.

அவர் இந்துமதத்தைச் சார்ந்தவர். தெற்கு அல்ல அவர் வடக்கைச் சேர்ந்த தமிழர். அவர் மீதான தாக்குதலுக்கு எதிராக இந்திய மீனவர்கள் கூட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என ஜனாதிபதி கூறினார்.
தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு நீங்கள் ஏதாவது தெரிவிக்க விரும்புகின்றீர்களா என ஊடவியலாளர் ஒருவர் கேட்டபோது அதற்கு ஜனாதிபதி 'அதனை நிறுத்துங்கள்' என்றார். தமிழ்நாட்டிலுள்ள கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பொருட்களை வர்த்தகர்கள் அகற்றியுள்ளனர் என்பதையும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.