Thursday, January 12, 2012

இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஸ்ணாவின் பயண நிகழ்ச்சி நிரலில் கூட்டமைப்பை சந்திப்பது பற்றி குறிப்பிடப்படவில்லை!

விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவின் பயண நிகழ்ச்சி நிரலை இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டள்ளது. அதில் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதாக எவையும் குறிப்பிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்திய வெளிவிவகார அமைச்சு நேற்றையதினம் வெளியிட்டுள்ள இப்பயண நிகழ்ச்சி நிரலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்புக்கள் பற்றி எந்த குறிப்புக்களும் இடம்பெறவில்லை எனவும் முதலாவது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவையே சந்திப்பார் எனவும் அதன்பின்னர் வடபகுதிக்கான விஜயத்தினை மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. எஸ்எம்.கிருஸ்ணா கொழும்பில் தங்கியிருக்கும் போது இலங்கையில் குறைந்தது ஆறு இருதரப்பு உடன்பாடுகளில் கையெழுத்திடவுள்ளாதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.