Thursday, January 12, 2012

காணியும் பொலிசும் கொடுக்கவே கூடாது - ஒற்றைக்காலில் நிற்கும் விமல் வீரவன்ச:

மாகாணசபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் ஒருபோதும் வழங்கக்கூடாது அது பிரதேச வாதத்தைத் தூண்டக்கூடியது என்று அரசின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் இனவாதியுமான விமல் வீரவன்ஸ கூறியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் தெரிவித்ததாவது:

வடகிழக்கு மாகாணசபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்காது மாற்றாக உள்ளூராட்சி சபைகளுக்கு மேலதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாட்டைக் கூறுபோடுவதற்கு முயற்சிக்கின்றனர். அவர்களின் கோரிக்கைகளுக்கு இணங்கினால் மாகாணசபைகள் மேலும் சக்திபெறும்.

மாகாணசபைகளுக்குக் கூடுதலான அதிகாரங்கள் வழங்கினால், மக்கள் மத்தியில் பிரதேசவாதம் ஏற்படும். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பிரிக்கப்பட்ட இலங்கையல்ல ஒன்றிணைந்த இலங்கையே அவசியம் என்றார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.