Thursday, January 12, 2012

ஒன்லைன் மூலம் விசா விற்பனை! இலங்கை வரும் வெளிநாட்டவர்களிடமிருந்து 10 நாட்களில் ரூபா 7 கோடி வசூல்:

கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வரும் வெளிநாட்டவர்களிடமிருந்து "ONLINE"விசாவுக்காக கடந்த 10 நாட்களுக்குள் மாத்திரம் 7 கோடி ரூபா பணம் வருமானமாக வசூலிக்கப் பெற்றுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிரதம கட்டுப்பாட்டாளர் நாயகம் சூலரத்ன பெரேரா தெரிவித்தார்.

இதேவளை, நேற்று முன்தினம் 10ம் திகதி நள்ளிரவு முதல் நேற்று நண்பகல் வரையான காலப் பகுதிக்குள் மாத்திரம் சுமார் 2000 வெளிநாட்டவர்கள் இலங்கை வருகைத் தந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்குள் வருபவர்களுக்கு இதுவரை காலமும் இலங்கை இலவச விசா வழங்கி வந்துள்ளது.

இந்நிலையில், இலவச விசா வழங்கும் நடைமுறை 2011 டிசம்பர் 31ம் திகதி முதல் ரத்துச் செய்து அதற்கு பணம் அறவிடுமாறு கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியிருந்தார். ஜனவரி முதலாம் திகதி முதல் வெளிநாடுகளிலிருந்து இலங்கை வரும் வெளிநாட்டவர்களிடமிருந்து கடந்த 10 நாட்களுக்குள் 7 கோடி ரூபா அறவிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.