Thursday, January 12, 2012

சர்வதேச விசாரணைகள் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் -ஸ்லோவேனிய நீதவான்

இலங்கையில் சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட்டால் அதுபாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என ஸ்லோவேனிய நாட்டு சிரேஸ்ட நீதவான் எர்னஸ்ட்பெட்ரிக் குறிப்பிட்டுள்ளார்.

நீதவான் எர்னஸ்ட் பெட்ரிக் ஸ்லோவேனியாவின் அரசியல் சாசன நீதிமன்றின்தலைவராக கடமையாற்றுகின்றார்.

மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில்சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட்டால் அது சாதக விளைவுகளை காட்டிலும் பாதகமான விளைவுகளையேஅதிகம் ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு ரீதியில் சுயாதீனமான விசாரணைகளை நடத்துவதன் மூலம் சர்வதேசவிசாரணைகளுக்கான வழிகளை தடுக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமை பாதுகாப்பு தொடர்பில் குறித்த நாடு எடுக்கும் தீர்மானங்கள்நிரந்தரமானவையாக அமையக் கூடும் எனவும் இதன் காரணமாகவே உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிசாரணைகளுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை அமைத்து விசாரணை நடத்தி அறிக்கைசமர்ப்பிக்கப்பட்டுள்ளமை ஆரோக்கியமான நகர்வாகவே கருதப்பட வேண்டும் என அவர்தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் காட்டி வரும் அக்கறைவெளிப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு மதிப்பளித்து நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சகல கோணங்களிலும் விசாரணைநடத்தி, குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் அதன் பொறுப்பை ஏற்றுக்கொள்ளதயங்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச்சாட்டுக்கள் மூடிமறைக்கப்பட்டால் ஏதேனும் ஓர் சந்தர்ப்பத்தில்அது மீண்டும் தலைதூக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விசேட சொற்பொழிவு ஒன்றை ஆற்றுவதற்காக கொழும்பு சென்றிருந்த போதுஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்த பிரத்தியேக செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.