Monday, January 16, 2012

ஈழத் தமிழர்களுக்கு தனித் தாயகம் கோரி பொங்கலை தவிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் உண்ணாநிலை அறப்போராட்டம்:

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தை 2 ஆம் நாள் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் இன அழிப்பை தடுப்பதற்காகவும் ஈழத்தை மீட்பதற்காகவும் சாகும்வரை உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டார். தொடர்ச்சியாக நான்கு நாட்கள் தொடர்ந்த உண்ணாநிலை போராட்டம் தமிழக அரசியல் தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க உண்ணாநிலை கைவிடப்பட்டது.

தை 2 ஆம் நாள் உண்ணாநிலை போராட்டத்தை நினைவு படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மறைமலைநகரில் காஞ்சி மாவட்ட துணைச் செயலாளர் கேது (எ) தென்னவன் அவர்கள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் ஒரு நாள் உண்ணாநிலையில் போராட்டம் நடத்துகின்றனர்.
அதே போல் இன்று ஈழத் தமிழர்களுக்கு தனிதாயகம் கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி ஒருநாள் உண்ணாநிலை அறப்போராட்டத்தை நடத்தினர். காலையில் காஞ்சி மாவட்ட செயலாளர் தொடங்கி வைக்க மாநில நிர்வாகிகள் தா.பார்வேந்தன், இயக்குனர் சிபி சந்தர் கலந்துகொண்டு பேசினர். நிறைவாக தலைவரின் தனிச்செயலாளர் இளஞ்சேகுவேரா அவர்கள் பழச்சாறு கொடுத்து உரையாற்றி முடித்து வைத்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.