Friday, January 13, 2012

ஆணைக்குழுவின் அறிக்கையில் ஏற்றுக்கொள்ளக் கூடிய பரிந்துரைகள் எவையும் இடம்பெறவில்லை – பிரிட்டன்!

தமிழ் மக்களின் குறைகளை இலங்கையில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் தீர்க்க தவறியமையே இனப் பிரச்சினை ஏற்பட மூல காரணம் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.

இலங்கையினால் வெளியிடப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றத்தில், வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்த யுத்தத்தின் போது அரச தரப்பினாலும் விடுதலைப் புலிகளாலும் மனித உரிமைகள் இடம்பெற்றுள்ளதாக மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

இறுதியாக 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அவ் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன எனவும் இதன் போது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கையில் போர்க் குற்றங்கள் குறித்து ஏற்றுக் கொள்ளக் கூடிய பரிந்துரைகள் எவையும் இடம்பெறவில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.