Tuesday, January 03, 2012

2009ம் ஆண்டு புலிகள் முள்ளிவாய்க்காலுக்கு வரும் முன்னரே டிரான்ஸ் மீட்டர்கள் விதைக்கப்பட்டது !

2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையே நடந்த போரில் இலங்கை இராணுவம் பல அதிர்ச்சி வெற்றிகளைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது . இந்த வகையில் பாரிய பலத்துடன் இருந்த புலிகள் எவ்வாறு யுத்தத்தில் தோல்விகண்டார்கள்...
என்பது தமிழ் மக்களிடையே இன்றுவரை பேசப்படும் ஒரு விடையமாகும். அதாவது விடுதலைப்புலிகள் கிளிநொச்சியை இழந்த பின்னர் அவர்கள் பூநகரி அல்லது மன்னர் பக்கம் செல்ல இயலாதவாறு இலங்கை இராணுவம் அங்கே முன்னேறிய நிலையில் அவர்கள் விஸ்வமடு ஆனந்தபுரம் பகுதிகளுக்கு தள்ளப்பட்டார்கள் என்பது உண்மை .

ஆனால் அவர்கள் இறுதியாக முள்ளியவாய்க்காலுக்குத்தான் செல்வார்கள் என்பது இராணுவத்திற்கு தெரிந்துள்ளது .இதனை அறிந்தே இராணுவத்தினர் படு சூட்சுபமான விடையம் ஒன்றைக் கையாண்டுள்ளனர்.

புலிகள் புதுமாத்தளானில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி நகர 2 தினங்களுக்கு முன்னரே ஆளில்லா விமானம் மூலம் ஒட்டுக்கேட்க்கும் டிரான்ஸ் மீட்டர்கள் அப்பகுதியில் விதைக்கப்பட்டுள்ளது.

சுமார் 14 நாட்கள் தாக்குப்பிடிக்ககூடிய இந்த டிரான்ஸ் மீட்டர்களை வானில் இருந்தவாறு பூமியை நோக்கி விதைக்கலாம். இவை குறிப்பாக ஊசிபோன்ற முனைகளைக் கொண்டவை.

அவை மரத்திலும் பற்றைகளிலும் வந்து விழ்ந்துவிடும். மரங்களின் கொப்புகளில் அவை குத்திக்கொண்டு சன்னங்கள் (துப்பாக்கிக்குண்டுகள் ) போலக்காணப்படும்.

இதனை எழிதில் எவரும் சந்தேகப்பட முடியாது. இவ்வகையான டிரான்ஸ் மீட்டர்கள் கனடாவில் உள்ள ரொரன்டோவில் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் பல சி . ஐ. ஏ நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

இதில் சிலவற்றை இந்தியாவில் பெங்களூரில் உள்ள ஒரு சி . ஐ. ஏ. யிடம் இருந்து 2006ம் ஆண்டு கொள்வனவு செய்துள்ளது. இவை பின்பு இலங்கைக்கு விற்பனை செய்யப்பட்டதாக அறியப்படுகிறது.

பாதுகாப்பு உபகரணங்களை கொள்வனவு செய்து விற்பனை செய்யும் இந்த பெங்களூர் கம்பெனி இதுபோன்ற டிரான்ஸ் மீட்டர்களை ஏன் கொள்வனவுசெய்கிறது என்ற கேள்வி ஒருபுறம் இருக்க இவை இலங்கை அரசுக்காகத்தான் கொள்வனவு செய்யப்பட்டதாக என்ற சந்தேகங்களும் இருக்கிறது.

இந்தவகை டிரான்ஸ் மீட்டர்கள் தாம் உள்வாங்கும் ஒலியை சில மீட்டர் தொலைவிற்க்கே அனுப்பவல்லது என்பதனால் முல்லைத்தீவுக் கடலிலேயே ஒரு கப்பலுக்குள் சிறிய தளம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் விடுதலைப்புலிகள் மற்றும் பொதுமக்கள் என்ன பேசுகிறார்கள் என்பது இராணுவத்திற்கு மிகத்தெள்ளத் தெளிவாகக் கேட்டுள்ளது. இறுதி யுத்தத்தின்போது புலிகள் தமது வோக்கி டோக்கியை பாவிப்பதைக் குறைத்து சட்டலைட் போன்களையே இவர்கள் அதிகம் பாவித்துள்ளனர்.

இவ்வாறு தான் நடக்கும் என இலங்கை இராணுவம் முன்கூட்டியே கணக்குப் போட்டுள்ளது. இதனால் பல தடவைகள் புலிகள் நடத்திய சில சந்திப்புகள் மற்றும் அச்சந்திப்பில் கலந்துகொண்ட தலைவர்கள் அச் சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் என பலவற்றை இராணுவம் அறிந்துள்ளது.

கடலில் அமைக்கப்பட்ட தற்காலிகத் தளத்தில் பல தமிழர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு டிரான்ஸ்மீட்டர்கள் ஒவ்வொன்றும் அனுப்பும் உரையாடல்களை உடனடியாகவே மொழிபெயர்ப்புச் செய்யும் வசதிகளையும் இலங்கை இராணுவம் ஏற்படுத்தியுள்ளது.

இவை அனைத்தையும் புலிகள் கண்டு பிடிக்கும்போது இறுதிக் கட்டம் நெருங்கிவிட்டது. எந்த மரத்தில் அல்லது எந்தப் புதரில் எந்தவகையாக டிரான்ஸ்மீட்டர்கள் இருக்கும் என்று அதனைத் தேடியழிப்பதே பெரும்பாடாகப் போனது என இறுதிநேரத்தில் அங்கிருந்து தப்பிவந்த புலிகளின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

மொத்தத்தில் நடந்து முடிந்த போரானது ஹை-ரெக் எனப்படும் அதிநவீன தொழில் நுட்ப்பத்தைக் கையாண்டு நடாத்தப்பட்ட யுத்தமாகும்.

இதனை வைத்துப் பார்க்கும்போது பொதுமக்கள் எங்கிருந்தார்கள் புலிகள் எங்கே இருந்தார்கள் என்பது இலங்கை இராணுவத்துக்குத் தெள்ளத்தெளிவாகத் தெரிந்திருக்கும். இருப்பினும் அவர்கள் வேண்டும் என்றே பொதுமக்களைக் குறிவைத்துள்ளனர் என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.