Thursday, December 01, 2011

மனித உரிமை சாசனம் குறித்த உரையை ஆற்ற முடியாது- சபையில் ரணில்!

மனித உரிமை சாசனம் குறித்து தான் ஆற்றவிருந்த விசேட உரையை தன்னால் நிகழ்த்த முடியாது என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

தான் சமர்பித்த உரையில் பாரிய திருத்தங்கள் செய்யப்பட்டிருப்பதால் தன்னால் அவ்வுரையை நிகழ்த்த முடியாது என ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

மனித உரிமை சாசனம் மற்றும் சரத் பொன்சேகா குறித்து ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் கடந்த 29ம் திகதி செவ்வாய்கிழமை விசேட உரையொன்றை நிகழ்த்தவென தனது உரையை தயாரித்து சபாநாயகர், பிரதமர் மற்றும் ஆளும் கட்சி முக்கியஸ்த்தர்களுக்கு முன்னதாகவே அனுப்பி வைத்திருந்தார்.

இந்த நிலையில் செவ்வாய்கிழமை 29ம் திகதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அந்த உரையை நிகழ்த்த பாராளுமன்றில் அனுமதி அளிக்கப்படவில்லை.

எனினும் நேற்று 30ம் திகதி புதன்கிழமை தன்னால் உரை நிகழ்த்த முடியுமா என ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் கேள்வி எழுப்பியபோது அவ்வுரையை திருத்தங்களுடன் நிகழ்த்த இன்று 01ம் திகதி அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ள தனது உரையை வாசிக்க முடியாது என ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றில் அறிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.