Thursday, December 01, 2011

அநுராதபுரம் சிறைக் கைதிகளை கூட்டமைப்பு சந்தித்தது!

அநுராதரம் சிறைச்சாலையில் பாதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடியிருக்கின்றனர்.
சிறைச்சாலை ஆணையாளரின் அனுமதியுடன் சிறைச்சாலை சென்ற கூட்டமைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பா.அரியநேத்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், யோகேஸ்வரன் சி.சிறீதரன், ஈ.சரவணபவன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்தப் பயணம் குறித்து எமக்குக் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,

சிறைச்சாலை அதிகாரிகள் மிக மோசமான முறையில் தம்மைத் துன்புறுத்தியதாகவும், தமது வணக்கத்துக்குரிய இடம், பொருட்கள் என்பனவும் அதிகாரிகளால் கடுமையாகச் சேதமாக்கப்பட்டதாகவும் இதனால் இனிவருங்காலங்களில் இதே சிறைச்சாலையில் தொடர்ந்தும் தம்மால் இருப்பது அச்சத்துக்குரியதாகவே உள்ளதாகவும் இந்தவிடயம் தொடர்பில் உரியவர்களின் கவனத்திற்குக் கொண்டுவந்து நடவடிக்கை எடுக்குமாறும் கைதிகள் கேட்டுக்கொண்டனர்.

மாற்றுவலுவுள்ள 09 கைதிகள் இவர்களுடன் உள்ளனர். அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் இலங்கை முழுமையிலும் உள்ள சிறைச்சாலைகளில் மாற்றுவலுவுள்ள 100ற்கும் அதிகமான கைதிகள் உள்ளனர். நல்லிணக்கம் இன ஐக்கியம் எனப் பேசிக்கொள்கின்றவர்கள் இவ்வாறான மாற்றுவலுவுள்ளவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தால் இன ஐக்கியம் வலுப்படும் அதேவேளை சமூகத்தில் பாதிக்கப்பட்டு வருகின்ற தமது குடும்பத்தினரையும் காத்துக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்தனர்.

இந்த விடயம் தொடர்பில் அரச தரப்பிடமும் ஏனைவர்களிடம் பேசி நடவடிக்கை எடுப்பதற்கான சகல முயற்சிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும் என்று தாம் கைதிகளிடம் வாக்குறுதி வழங்கியதாகவும் அரியநேத்திரன் மேலும் தெரிவித்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.