Wednesday, December 14, 2011

விடுதலையின் வீச்சு ஒய்ந்து ஆண்டுகள் ஜந்து..

தமிழீழ விடுதலைக்காக ஓங்கி ஒலித்த எங்கள் தேசத்தின் குரல் அன்ரன்பாலசிங்கம் அவர்களின்ஜந்தாம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தத்துவாசிரியர் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் ஜந்தாம் ஆண்டு நினைவுகள் என்றும் எங்களுடன்

.1979ம் ஆண்டு தமிழகத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களைச் சந்தித்த நாள் தொடக்கம் தேசியத் தலைவரின் கருத்தோடு ஒன்றிக் கலந்து இறுவரை தேசியத் தலைவருக்கு ஆதரவாக தமிழ்மக்களின் விடுதலைக்கா அன்புகொண்ட அண்ணனாக உடன் இருந்து தேசித்தலைவரின் பணிச் சுமையைத் தானும் பங்கிட்டுக்கொண்டவரலாற்று நாயன்தான் எங்கள் தேசத்தின் குரல்.தன்னையுத் தனதுவாழ்க்கைத்துணையினையும் விடுதலைப்போராட்ட பதையில் இணைத்து விடுதலைப்பணிகளை தன்பணியாக குடும்பபணியாக நெஞ்சில் சுமந்து உழைத்தபெருமை இவரையே சாரும்.

சிங்கள வல்லாதிக்கர்களின் தமிழ்மக்கள் மீதான அடக்குமுறைகளை உலகறியசெய்த ஆசான் உலகபோராட்ட வரலாறுகளை கற்றறிந்துகொண்டு விடுதலைஅடைந்தநாடுகளின் வரலாற்றினை ஈழத்தில் ஒவ்வொரு தமிழ்மகன்மத்தியிலம் விதைத்துசென்ற நாயகன்.இந்த விடுதலைப்போராட்டத்தின் உண்மைநிலையினை உலகம் உணரவேண்டும் என்று உலகநாடுகள்எல்லாம் சென்று தமிழ்மக்களின் விடுதலைக்காக குரல்கொடுத்த குரல் இன்று ஒய்ந்து ஜந்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் அவரின் நினைவுகளை சுமந்து புலம்பெயர்மண்ணில் தமிழ்மக்களின் விடுதலையினை உலகத்திற்கு எடுத்துகாட்டிக்கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழர்கள் இன்றும் அவர்காட்டிய வழியில் சென்று கொண்டிருக்கின்றார்கள்.

புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொரு தமிழ்மகனும் தேசத்தின் குரலின் கனவினை நெஞ்சில் சுமந்து தமிழ்மக்களின் விடுதலைக்கா தாங்கள் வாழும்நாடுகளில் தொடர்ந்தும் உழைக்க இன்றைய நாளில் உறுதி ஏற்போம்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.