யாழ்ப்பாணத்தையும் கொழும்பையும் இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்கு இன்னமும் ஐம்பது ஆண்டுகள் செல்லும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கிண்டல் பாணியில் தெரிவித்துள்ளார். தெற்கு அதிகவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்கு பத்து ஆண்டு காலம் தேவைப்பட்டது அதுபோல வடக்கு அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கு இன்னும் பல காலம் எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெடுஞ்சாலை அமைப்பதாகத் தெரிவித்து பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் உலகின் மிகவும் குறுகிய மற்றும் சிறிய நெடுஞ்சாலையாக அண்மையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட நெடுஞ்சாலையை குறிப்பிட முடியும் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றில் ஹைகோப் வழக்கு விசாரணைகளில் கலந்து கொண்டு திரும்பிய போது அவர் செய்தியாளர்களிடம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.