வவுனியா முகாம்களில் துன்பப்பட்டு வன்னிப் பகுதியில் மீள்குடியேற்றப்பட்டு கொட்டில்களில் வாழும் மக்கள் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மீண்டும் தற்காலிக முகாம்களைத் தேடிச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் இவ்வாறு இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்.
கிளிநொச்சியில் பெய்துவரும் மழை காரணமாக இதுவரை 547 குடும்பங்களைச் சேர்ந்த 2392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கரைச்சியில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 68 பேரும், கண்டாவளை பிரதேசத்தில் 531 குடும்பங்களைச் சேர்ந்த 2324 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதோடு கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள இரு தற்காலிக முகாம்களில் 247 குடும்பங்கைச் சேர்ந்த 1052 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 499 குடும்பங்கைச் சேர்ந்த 1944 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதில் கரைத்துறைப்பற்றில் 58 குடும்பங்களைச் சேர்ந்த 195 பேரும் மாந்தை கிழக்குப் பகுதியில் 49 குடும்பங்களைச் சேர்ந்த 170 பேரும் துணுக்காய் பிரதேசத்தில் 392 குடும்பங்களைச் சேர்ந்த 1579 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் நல்லூரில் 13 குடும்பங்கைச் சேர்ந்த 42 பேரும் தெல்லிப்பளையில் 92 குடும்பங்களைச் சேர்ந்த 362 பேரும் சங்கானையில் 259 குடும்பங்களைச் சேர்ந்த 1016 பேரும் யாழ்ப்பாணத்தில் 803 குடும்பங்களைச் சேர்ந்த 3250 பேருமாக மொத்தம் 1171 குடும்பங்களைச் சேர்ந்த 4670 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் தெல்லிப்பளையில் 92 குடும்பங்கைச் சேர்ந்த 362 பேர் தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.