Wednesday, November 16, 2011

முன்னேற்றகரமான நகர்வுகளை மேற்கொளுமாறு இலங்கையை மீண்டும் வலியுறுத்துகிறது அமெரிக்கா!

தமிழ் மக்களுடனான மீள் நல்லிணக்கம் சார்ந்த திட்டவட்டமானதும் முன்னேற்ற கரமானதுமான நகர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதை இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அத்துடன் வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்குரிய பொறுப்புக் கூறுதலை உறுதிப்படுத்த வேண்டுமெனதெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை பாதுகாப்புச் செயலாளர் றொபேட் எம். ஸ்கெர் தெரிவித்துள்ளார்.

காலியில் நடைபெற்ற கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் கருத்துரை க்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்­ஷ‌ முன்னிலையிலேயே றொபேட் எம்.ஸ்கெர் மேற்கண்ட கருத்தைத் தெரிவித்துள்ளார். அனைத்து இலங்கையர்களின் உரிமைகளையும் நிலை நாட்டுவதற்கான முன்னேற்றகரமான செயற்பாடுகளை இலங்கை அரசாங்கத்திடம் இருந்து அமெரிக்கா தொடர்ச்சியாக எதிர்பார்க்கிறது என்பதை இம் முறை தனது பயணத்தின் போது தான் தெளிவுபடுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இரு தரப்பு நலன்கள் மற்றும் கடற்படை சார்ந்த பாதுகாப்பு கூட்டுச் செயற்பாடு குறித்து நான் இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரை யாடவுள்ளேன்.அனைத்து இலங்கையர்களின் உரிமைகள் மற்றும் தமிழ் மக்களுடனான மீள் நல்லிணக்கம் சார்ந்த திட்டவட்டமானதும் முன்னேற்றகரமானது மான நகர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை அமெரிக்கா கோருகின்றது என்பதை இச்சந்திப்பின் போது தெளிவுபடுத்தவுள்ளேன்.

அத்தோடு இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்ற மோசமான மனித உரிமை மீறல்களுக்குரிய பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்து வதற்கு இலங்கை அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுப்பது மிக அவசியமானது.

தமது நலன்களை பகிருகின்ற சக்திகளுடனும் உறவைப் பேணும் அதே வேளை மனித உரிமை விவகாரங்களில் முன்னேற்றங்களை ஏற்படுத்தும் நிபந்தனை அடிப் படையிலும் உறவைப் பேணும் கொள்கை நெறியினை அமெரிக்கா பின்பற்றும் என்பதை ஒபாமா நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த இரண்டு கொள்கைகளும் ஒன்றுக்கொன்று முரண்பாடான வையல்ல. இவை ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்ததாக இருப்பது அவசியமானது எனவும் தெற்கு மற்றும் தென்கிழக்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணைப் பாதுகாப்புச் செயலர் றொபேட் எம். ஸ்கெர் சுட்டிக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை போர்க் குற்ற விசாரணை தொடர்பாக இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையை விரைவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ஷ‌விடம் கையளிக்கவுள்ள நிலையில், போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து அவ்வறிக்கை எவ்வகையான பரிந்துரைகளை முன் வைக்கும் என்பதில் சர்வதேச சமூகம் பெரும் அக்கறை கொண்டுள்ளது. இவ் அறிக்கை வெளியாவதற்கு முன்பான காலப்பகுதியில் இது தொடர்பான அழுத்த ங்களை மேற்கு நாடுகள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.