தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் பிறந்த தினமான 26, மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளை நினைவில் வைத்துள்ள படையினருக்கு வடக்கு கிழக்கு எப்பகுதியிலாவது ஊர்வலங்களோ, பொதுக்கூட்டங்களோ நடத்துவதாயின் முன்னனுமதி எடுக்கவேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.
வன்னி மாவட்டத்தில் கனகராயன் குளம் மகாவித்தியாலயத்தில் வவுனியா வடக்கு வலயக்கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் கனகராயன்குளம் மகா வித்தியாலய மாணவர்களால் உலக கைகழுவினர் தின விழிப்புனர்வு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்விற்கு யுனிசெவ் நிதி அனுசரணை வழங்கியிருந்தது.
இந்த ஊர்வலம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30க்கு கனகராயன் குளம் பொதுச் சந்தையில் ஆரம்பமாகிய நிலையில் அங்கு வந்த இராணுவத்தினர் ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்தியதுடன் இதற்கான அனுமதி பெறப்படவில்லை எனவும் என்ன நிகழ்வாயினும் எம்மிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் அச்சுறுத்தியதுடன் அங்கு கூடி இருந்த வவுனியா வடக்கு பிரதிக் கல்விப்பணிப்பாளர், யுனிசெவ் பிரதிநிதியையும் விசாரணைக்கென அழைத்துச் சென்றனர்.
மாவீரர் வார நிகழ்வுகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் நடைபெற்றுவிடும் என்பதற்காக அதிகளவான இராணுவப் புலனாய்வாளர்களின் பிரசன்னம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.