புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் 3 ஆயிரம் பேர் வரையில் தற்போது யாழ் மாவட்டத்தில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வேலை வாய்ப்புக்கள் கோரி மாவட்ட செயலகத்திற்கு விண்ணப்பித்துள்ளனர் என்று யாழ் மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இதேவேளை முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கும் அதே சமயம் தொழிற் பயிற்சிகளையும் அரசு வழங்கி வருகிறது. இருப்பினும் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னர் அவர்களிற்கான தொழில் முயற்சிகளிற்கு உதவவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விடுவிக்கப்பட்ட போராளிகள் கருத்து தெரிவிக்கையில்:
ஐ.ஓ.எம். நிறுவனத்தினால் அடையாள அட்டை மாத்திரமெ வழங்கப்பட்டுள்ளது. அதற்கான பண உதவியும் கிடைக்கவில்லை. அத்தடன் சுகாதார வாழவாதார வசதிகளும் கிடைக்கவில்லை என்றனர்.
மூன்று பிள்ளைகளின் தாயான முன்னாள் பெண் போராளி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்:
எனது கணவர் ஒரு முன்னாள் போராளி. அவர் இதுவரையில் விடுவிக்கப்படவில்லை. முன்னர் சகல வாழ்வாதார செயற்பாடுகளும் இயக்கம் சார்ந்ததாகவே இருந்தது. இப்போது எதுவுமில்லாத நிலையில் வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு சிரமமான நிலையில் உள்ளோம். அத்துடன் சமூகத்தில் எம்மை இரண்டாந்தர பிரைஜையாகவே பார்க்கின்றனர் என்றார்.
முன்னாள் போராளிகளுக்கு வேலை வாய்புக்கள் வழங்கப்படுவதாக அரசினால் கூறப்படுகின்ற போதிலும் உண்மையில் எந்தவித உதவிகளும் வழங்கப்படுவதில்லை.
வடமாகாண ஆளுநரால் வாகன சாரதிகளுக்கான பயிற்சி வழங்கப்பட்டு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட போதும் இதுவரை அவர்களிற்கு எந்தவித உதவிகளும் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.