Monday, November 07, 2011

பதவிப் பிரமானம் எடுக்கும் போது தலைவர் பிரபாகரன் மீது ஆணையிட்டு பதவியேற்ற தமிழின உணாவாளர் சோலை கேசவன்:

தமிழகத்தில் எந்த தேர்தலாக இருந்தாலும் வென்று பதவியேற்பவர்கள். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால் கடவுளின் பெயரால் என்றும், கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் உளமாற என்றும் பதவியேற்கும் போது சத்தியபிரமாணம் எடுத்து கொள்வார்கள். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாரகனின் பெயரால் தமிழக வார்டு உறுப்பினர் ஒருவர் பொறுப்பேற்றுள்ளது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
பழனி நகராட்சியின் 1வது வார்டு அ.தி.மு.க கிளைக் கழக செயலாளராகவும், பழனி நகர எம்.ஜி.ஆர் மன்ற துணை தலைவராகவும் இருப்பவர் சோலை கேசவன். இவருக்கு வயது 55. தீவிர அ.தி.மு.க கட்சிக்காரரான இவர், பழனி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பத்திரபதிவு அலுவலகத்தின் அருகில் பத்திரம் எழுதி வருகிறார். கடந்த 2001 உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க சார்பில் பழனி நகராட்சி 1வது வார்டு உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பின்னர் 2006 தேர்தலில் அதே வார்டில் போட்டியிட்டு தோற்றுப்போனார். இந்த முறை அ.தி.மு.கவின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போனதால், சுயேச்சையாக போட்டியிட்டு அ.தி.மு.க வேட்பாளரை காட்டிலும், 120 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 25ம் தேதி நகர மன்ற உறுப்பினராக பதவி பிரமானம் எடுக்கும் போது, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் வளர்த்து உருவாக்கப்பட்ட, உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவரான தம்பி பிரபாகரன் அவர்களின் விடுதலை வேட்கையின் மீது ஆணையாக நான், எனக்கு வாக்களித்த மக்களுக்கும், இந்த நாட்டுக்கும், நாட்டின் இறையாண்மைக்கும் கடமை தவறாமல் பணியாற்றுவேன் என்று உறுதி கூறுகிறேன் என்று பிராமானம் எடுத்துள்ளார்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.