Wednesday, October 12, 2011

தமிழக முகாம்களில் தங்கியிருந்த 37 இலங்கை தமிழ் அகதிகள் இன்று கப்பலில் நாடு திரும்பினர்

இலங்கையில் வட,கிழக்கு யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து இந்தியாவுக்குச் சென்ற இலங்கைத் தமிழர்களில் ஒரு தொகுதியினர் இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தனர்.இந்த முதல் தொகுதி அகதிகளில் 15 குடும்பங்களை சேர்ந்த 37 பேர் அடங்குகின்றனர். தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையிலான வர்த்தக கப்பலிலேயே இவர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்

இவர்களை வரவேற்கும் நிகழ்வு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்சவின் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச அகதிகளுக்கான பாதுகாப்புப் பிரிவின் ஆளுநரின் ஏற்பாட்டில் இந்தியாவும் இலங்கையும் இணைந்து புரிந்துணர்வின் அடிப்படையில் இவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் சார்பாக வயதுவந்த ஒருவருக்கு தலா 10,000 ரூபா வீதமும் சிறுவர்களுக்கு தலா 7,500 ரூபா வீதமும் பணம் வழங்கப்பட்டுள்ளதுடன் 2 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலிருந்து இவ்வாண்டு 1400 அகதிகள் நாடு திரும்பியுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.



0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.