தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான இன்றைய பேச்சுவார்த்தையில் மாகாண சபை அதிகார பகிர்வு தொடர்பாகவே விரிவாக கலந்துரையாடப்பட்டதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மாகாண சபையின் நிறைவேற்று அதிகாரம், ஆளுநருக்கான அதிகாரம், யார் யாருக்கு எவ்விதமான அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்பது தொடர்பில் அரசு தரப்புடன் கலந்துரையாடப்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இதன்படி இன்றைய பேச்சுவார்த்தைக்கான உரிய பதில் அரசு தரப்பிடமிருந்து பெறுவதற்காக, டிசம்பர் மாதம் 1ம் 14ம் 15ம் திகதிகளில் தொடர்ந்து சில சந்திப்புக்கள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் சுமந்திரன் ஆகியோரும் அரச தரப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரஜிவ விஜேசிங்க, சசின் வாஸ் குணவர்த்தன, அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா உள்ளிட்டோரும் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.