Tuesday, October 11, 2011

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை இரு அமெரிக்கர்கள் பெற்றனர்!

பொருளாதார அமெரிக்க நிபுணர்களான தாமஸ் சர்ஜன்ட்,68, மற்றும் கிறிஸ்டோபர் சிம்ஸ்,68, ஆகிய இருவருக்கும், இந்தாண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதுகுறித்து, நேற்று அறிக்கை வெளியிட்ட நோபல் பரிசு கமிட்டி,”பருப் பொருளியலின் (மேக்ரோ எக்கனாமிக்ஸ்) காரணம் மற்றும் விளைவுகள் குறித்த இருவரது ஆழ்ந்த ஆராய்ச்சிகளுக்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது’ எனத் தெரிவித்தது. அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக சர்ஜன்ட் பணியாற்றி வருகிறார். நியூஜெர்சி மாகாணத்தில் பிரின்செடான் என்ற இடத்தில் இயங்கி வரும், “பிரின்செடான் பல்கலைக்கழகத்தில்’ வங்கியியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார் சிம்ஸ்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின், பல நாடுகளில் நிகழ்ந்த பொருளாதார மாற்றங்கள், கொள்கைகள் போன்றவற்றைப் பற்றி சர்ஜன்ட் ஆய்வு செய்தார். மத்திய வங்கியால் வட்டி விகிதம் உயர்த்தப்படும் பட்சத்தில், அது எவ்வாறு பொருளாதாரக் கொள்கைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது பற்றி, சிம்ஸ் ஆய்வு செய்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.