ஐக்கிய தேசியக் கட்சியால் இதுவரை ஆதிக்கம் செலுத்தப் பட்டு வந்த அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை அமோக வெற்றியீட்டியுள்ளது. இந்த அமோக வெற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அரசாங்கம் மீதும் மக்களால் வழங்கப்பட்ட உறுதியான நம்பிக்கையை தெளிவாக எடுத்துக் காட்டுகிறதென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது, கிராமங்கள் மட்டுமன்றி நகரங்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை வெற்றியடையச் செய்துள்ளன.
கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியீட்டியிருந்த போதிலும் ஏனைய உள்ளூராட்சி மன்றங்களினூடான தோல்வியுடன் ஒப்பிடுகையில் இது ஒன்றும் பாரிய வெற்றியல்ல.
எமது மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயலாற்றும். ஒரு நாடு சிறந்த நாடாக வளருவதற்கு அங்கு சக்தி வாய்ந்த எதிர்க்கட்சியொன்று அவசியம். எமது நாட்டில் அப்படியான எதிர்க்கட்சியொன்று இல்லாமைக்காக நான் வருந்துகிறேன்.
பதுளையில் 25 சதவீதமானோர் தமிழர்களும் முஸ்லிம்களுமே. அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து 6 ஆயிரத்து 500 மேலதிக வாக்குகளை எமக்குப் பெற்றுத் தந்துள்ளமை அனைத்து இன மக்களுக்குமிடையிலான ஒருமைப்பாட்டை புலப்படுத்துகிறது.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.