ஆயுள் தண்டனை கைதி ஒருவர் சேலம் மத்திய சிறையில் பெண் காவலர் முன் நிர்வாணமாக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் தனசிங். இவரது மகன் ஆறுமுகம். கடந்த 2005ம் ஆண்டு எர்ணாவூரில் நடந்த கொலை சம்பவத்தில் ஆயுள் தண்டனை பெற்ற ஆறுமுகம், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று காலை உடலில் காயங்களுடன் ஆறுமுகம் உள்ளிட்ட சில கைதிகளைச் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் காவல்துறையினர் அழைத்து வந்தனர். அப்போது சிறையில் பெண் ஜெயிலர் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்து சித்திரவதை செய்ததாக கூறி ஆறுமுகம் கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து ஆறுமுகம் கண்ணீர் மல்க கூறியதாவது:
எனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை. அவரைப் பார்க்க என்னை அனுப்ப வேண்டும் என்று சிறை நிர்வாகத்திற்கு எனது மனைவி மனு போட்டார். நானும் பரோலில் செல்ல அனுமதி கேட்டேன். ஆனால் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 6ம் தேதி, கைதிகளின் குறைகளைக் கேட்க நீதிபதி வந்தார். அப்போது சிறையில் இருக்கும் அவலங்களை அவரிடம் மனுவாக எழுதி கொடுத்தேன். இதனால் ஆத்திரமடைந்த அதிகாரிகள், சிறையில் நான் கேமரா செல்போன் வைத்திருந்ததாக ஒரு வழக்கைப் போட்டனர்.
கடந்த சில நாட்களாக எனக்கும், உடன் இருக்கும் கைதிகள் சிலருக்கும் சிறையில் சாப்பாடு தருவதே இல்லை. இது குறித்து நேற்று முன்தினம் ஜெயிலரிடம் கேள்வி எழுப்பினோம். காவல்துறையினர் எங்களை அடித்து உதைத்து சிறை அறைக்குள் போகச் செய்தனர்.
நேற்று அதிகாலை 3 மணிக்கு என்னை பெண் ஜெயிலர் ஊர்மிளா முன்னிலையில் ராஜாமனோகரன், குணசேகரன், சக்திவேல் ஆகியோர் நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்து அடித்து உதைத்தனர். இதனால் உடலில் காயங்கள் ஏற்பட்டது. தண்டனை காலம் முடிந்து திருந்தி வாழலாம் என்று நினைக்கும் எனக்குச் சிறையில் நடந்த சித்ரவதை மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.” இவ்வாறு கைதி ஆறுமுகம் கூறினார்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.