Wednesday, October 12, 2011

தமிழ் மொழியைக் கொலை செய்து மொழியுரிமை மாநாட்டுக்குத் தலைமை தாங்கும் மகிந்த!

இலங்கையில் உள்ள இரு மொழிகளில் தமிழ் மொழியைக் கொலை செய்து விட்டு, சர்வதேச ரீதியில் நடைபெறும் மொழியுரிமை மாநாட்டுக்குத் தலைமை தாங்குகின்றார் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ.

மொழிப் பயன்பாடு மற்றும் உரிமைகள் தொடர்பாகச் சர்வதேச ரீதியாக நடைபெறவிருக்கும் பிரதான மாநாடான மொழி மற்றும் அபிவிருத்தி பற்றிய ஒன்பதாவது சர்வதேச மாநாடு இம்முறை இலங்கையில் நடாத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மொழியுரிமை வழங்காத நாட்டில் முதன்முதலாக மொழியுரிமை மாநாடு நடத்தப்படுகின்றது. அதற்கு மொழியுரிமையை வழங்க மறுக்கும் ஜனாதிபதி மகிந்தவே தலைமை தாங்குகின்றார்.

மேற்படி மாநாடு ஒக்டோபர் 17 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை கொழும்பில் இடம்பெறவுள்ளது.

தமிழ் மொழியைக் கருமமொழியாக்கியதாக அறிவித்த அரசு, ஆனால் தற்போது வரை தனிச்சிங்கள மொழியிலேயே தமிழ்ப் பிரதேசங்களில் உள்ள அரச திணைக்களங்களுக்குச் சுற்றுநிருபங்கள் அனுப்பி வருகின்றது.

பேச்சளவில் உள்ள கருமமொழியான தமிழ் எந்தச் சுற்றுநிருபத்திலும் பயன்படுத்துவதில்லை. மாறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் பட்சத்தில் அதனை வாசிப்பதை விட சிங்களத்தை வாசிக்கலாம் என எண்ணத் தோன்றும்.

அந்தளவுக்கு அவ்விடத்தில் தமிழ் மொழி கொலை செய்யப்பட்டிருக்கும்.

எனவே இவ்வாறான நிலைமைகள் இலங்கையில் தொடரும் பட்சத்தில் மொழியுரிமை மாநாட்டுக்கு ஜனாதிபதி மகிந்த தலைமை தாங்குவதுடன், அது இலங்கையிலும் நடைபெறுவதென்பது வேடிக்கையான ஒன்று.

ஒருவருக்கு நீ அறிவுரை கூறும் முன் அது தொடர்பில் உனது நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை ஒரு கணம் எண்ணிப்பார் என சுவாமி இராமகிருஷ்ண பரமகம்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.