Wednesday, September 21, 2011

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பல்வேறு பொய்கள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன: ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டது எவ்வாறு தெரியும் என்கிறார் கோத்தாபாய.

சிறிலங்காவைக் குறிவைத்து அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக் குழுவை அமைக்கும் நோக்கில், பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பல்வேறு பொய்களும் அவிழ்த்து விடப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்துள்ள அவர், போரின் கடைசி 5 மாதங்களில் வன்னியில் ஒரு இலட்சம் பேர் மரணமானதாக பிரித்தானிய நாடாளுமன்ற விவாதத்தில் கூறப்பட்டுள்ளதாவும், இந்த விபரங்கள் அவர்களுக்கு எப்படித் தெரியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெனிவாவில் நடந்து கொண்டிருக்கும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை கூட்டத்தொடரின் கவனத்தை ஈர்ப்பதற்காக முட்டாள்தனமான முறையில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் மிகைப்படுத்திய தகவல்களை வெளியிட்டுள்ளதாகவும் கோத்தாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

நியுயோர்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்துக்கு முன்பாக சிறிலங்காகவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பரப்புரைப் போரின் ஒரு பகுதியே இது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.