Wednesday, September 21, 2011

அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா அதிபருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்! கூட்டம் நிறைவுபெறும் வரை உறவினர்களை சந்திக்கவும் மருத்துவ பரிசோதனைக்கு செல்லவும் தடை! தமிழர்களது போராட்ட முன்னெடுப்புகளால் முடங்கினார்.

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நியுயோர்க்கிற்கு வெளியே செல்ல வேண்டாம் என்று அமெரிக்க இராஜதந்திரிகள் அறிவுறுத்தியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நியுயோர்க்கிற்கு வெளியில் ஏனைய மாநிலங்களுக்குச் செல்வதால், போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்படக் கூடும் என்பதாலும் தமிழர்களால் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாலுமே சிறிலங்கா அதிபரை அங்கிருந்து வெளியே செல்ல வேண்டாம் என்று அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர் என குறிப்பிடப்படகிறது.


ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் இராஜதந்திரிகளுக்கு நியுயோர்க்கில் மட்டுமே இராஜதந்திர பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனது உறவினர்களை சந்திப்பதற்கும், மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவும், அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார் என தெரிவிக்கப்படகிறது. எனினும் அமெரிக்க அதிகாரிகளின் ஆலோசனையினால் அவரது திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனால் அவர் நியுயோர்க்கிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவ் ஊடகம் தெரிவித்துள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.