மக்கள் சட்டம் ஒழுங்கை மதித்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கிழக்கு மக்கள் சட்டத்தை கையில் எடுத்துச் செயற்படுவதற்கு அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கிண்ணியா கடற்படை முகாம் தாக்கப்பட்ட சம்பவம் உள்ளிட்ட அண்மையில் கிழக்கில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எந்தத் தரப்பினரின் வேண்டுகோளுக்காகவும் கிண்ணியா கடற்படை முகாம் அகற்றப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரச்சினை ஏற்பட்ட போது முஸ்லிம் அமைச்சர்கள் வழங்கிய ஆதரவு பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார். கிறிஸ் பேய் தொடர்பாக போலியான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு ஆசி வேண்டி பெண்களின் இரத்தம் எடுக்கப்பட்டு வருவதாக வெளியாகியுள்ள வதந்திகளில் உண்மையில்லை எனவும், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவிற்கு எதிராகவும் இவ்வாறான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.