இந்திய முன்னனி ஊடகங்களான ஹிந்து மற்றும் ஹெட்லைன்ஸ் ருடே ஆகியவற்றை சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கடுமையான சாடியுள்ளார். கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் சகோதரர் என்ற தலைப்பில் கடந்த 16ம் நாள் கோத்தாபய ராஜபக்ச தொடர்பாக "ஹிந்து" நாளேடு ஆசிரியர் தலையங்கம் ஒன்றை எழுதியிருந்தது. இதுகுறித்து நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய பாதகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கடுமையான தனது எதிர்ப்பபைக்காட்டியுள்ளார்.
தன்னைத்தொடர்புகொண்டு செவ்வி ஒன்றை பெறுவதற்கு இந்திய ஊடகவியலாளர் அழுத்தங்களை கொடுத்ததாவும் தான் மறுத்து விட்டதால், அந்த ஆத்திரத்திலேயே தன்னைப் பற்றி அவதூறான ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனிப்பட்ட ரீதியாக இந்து ஆசிரியர் என்.ராமுக்குத் தெரிந்திருந்த போதிலும், தன்னை இவ்வாறு விமர்சித்துள்ளது ஆச்சரியம் அளிப்பதாகவும் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.
"ஹெட்லைன்ஸ் ருடே" செய்தியாளருக்கு செவ்வியளிக்க தயக்கத்துடனேயே ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால், தன்னிடம் இருந்து தனது சகோதரரை விலகுமாறு "ஹிந்து" கூறுவதாகவும் கோத்தாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ஊடகவியலாளர் தான் ஒரு நல்ல தொகுப்பை செய்து, தனக்கு நற்பெயரைத் தேடித் தருவதாக உறுதிமொழி கொடுத்ததாகவும், ஆனால் கடைசியில் "ஹெட்லைன்ஸ் ருடே" தனது பெயரைக் கெடுத்து விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய ஊடகங்கள் அதிகாரப்பகிர்வு, வடக்கு கிழக்கு விவகாரம் தொடர்பான தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாடு, தமிழ் பேசும் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்குட்டுத்தப்பட்டது குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாகவே, இந்திய ஊடகம் தன்னிடம் கேள்வி எழுப்ப விரும்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரப்பகிர்வு தொடர்பாக தான் பதிலளிக்க விரும்பாத போதிலும், தான் கூறிய தனிப்பட்ட கருத்தை அந்த ஊடகவியலாளர் வெளியிட்டு திருப்திப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சனல்-4 ஆவணப்படத்தில் தோன்றிய பிரித்தானியக் குடியுரிமை பெற்ற தமிழ்ப்பெண் குறித்த கருத்தையும் இந்திய ஊடகவிலாளர் தவறாக திரிபடுத்தி விட்டதாகவும் அதை வைத்துக் கொண்டு "ஹிந்து" நாளேடு தன்னை வெளியேற்றமாறு சிறிலங்கா அதிபருக்கு ஆலோசனை கூறியுள்ளதாகவும் கோத்தாபய ராஜபக்ச விசனம் வெளியிட்டுள்ளார்.
அனைத்துலக சமூகத்தின் ஒருபகுதி ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயற்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ள அவர், போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் எத்தகைய பதில்களைக் கூறிய போதும் அவர்கள் திருப்தியடையவில்லை என்றும் கூறியுள்ளார்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.