யாழ். அரியாலை நாவலடிப் பகுதியில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டு வரும் வீடுகள் தரமற்ற முறையில் அமைக்கப்படுகின்றன என்று தனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்த வீடமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்திய அரசாங்கத்தினால் யாழ்.மாவட்டத்தில் 150 வீடுகள் முதற்கட்டமாக அமைக்கப்பட்டு வருகிறது. இதில் அரியாலை நாவலடிப் பகுதியில் 50 வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.மாவட்ட பொறியியல் குழுவினரால் இந்த வீடமைப்புத் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு தரமான முறையில் அமைப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.