Wednesday, August 03, 2011

இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க முடியாது – இந்திய பிரதமர்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது செயலாளர் வை.கோபாலசாமி, நேற்றைய தினம் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துள்ளார்.இதன் போது இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா தொடர்ந்தும் இது குறித்து மௌனம் காக்க கூடாது எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.இதன்போது கருத்து வெளியிட்ட பிரதமர் மன்மோகன் சிங், தமிழக அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளை கொண்டு, இலங்கை மீது பொருளாதாரத் தடையை உடனடியாக ஏற்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார உறவுகளை கட்டுப்படுத்த இயலாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.பிராந்திய பொருளாதார நட்பு நாடு என்ற வகையில் இலங்கையை கட்டுப்படுத்தும் பட்சத்தில் இந்தியா பாதிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை பிரதமரை சந்தித்ததன் பின்னர், இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் அவர் சந்தித்து பேசியதாக தெரிவிக்கப்படுகிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.