வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மஹோற்சவம் நாளை வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து 25 நாள்களுக்கு திருவிழா இடம்பெறவுள்ளது.
நாளை வியாழக்கிழமை காலை விசேட பூசை, அபிசேகங்கள் இடம்பெற்று முற்பகல் 10 மணிக்கு கொடியேற்றம் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து திருவிழா ஆரம்பமாகி 25 தினங்கள் இடம்பெறும்.
நல்லூர் ஆலயத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாக்கப்பட்டுள்ளன. அத்துடன் பக்தர்களின் நலன் கருதி குடிதண்ணீர், சுகாதார வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் நல்லூர் ஆலய வீதியினூடான போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது.
ஆலய வீதியில் விசேட முதலுதவிச் சிகிச்சைப் பிரிவு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் நல்லூர் உற்சவகாலத்தின் போது தமிழ் பொலிஸார் கடமையில் ஈடுபடவுள்ளனர். அத்துடன் ஆலயத்தின் வீதிகளில் கண்காணிப்பு வீடியோக் கமராக்கள் பொருத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நல்லூர் ஆலய முன்வீதி, பின்வீதி, அரசடி வீதி ஆகியவற்றில் அலங்காரப் பந்தல்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பெருந்திருவிழாவில் இம்முறை ஏராளமானோர் வந்து கொள்வார்கள் என்று எதிர்க்கப்படுகின்றது.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.