Saturday, August 13, 2011

அழுத்தங்கள் அதிகரித்தால் ஐ. நா. கூட்டத்தில் கஸ்ரோவின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட இறுதி ஆயுதத்தை பாவிப்போம்! புலிகளுக்கு உதவியவாகளுக்கு சிறிலங்கா அரசு எச்சரிக்கை.

வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென தம்மீது அழுத்தங்களைப் பிரயோகித்துக் கொண்டிருக்கும் சில மேற்கத்தைய நாடுகளின் இரகசியங்களை வெளியிடுவதற்கு சிறிலங்கா அரசு தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

தம்மீது தற்போது அழுத்தத்தைப் பிரயோகிக்கும் பல மேற்கத்தைய நாடுகள் கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு அயுதங்களையும் தொழில்நுட்ப உபகரணங்களையும் தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும் வழங்கியமை தொடர்பான விபரங்களையே அம்பலப்படுத்த சிறிலங்கா அரசு தீர்மானித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச தலைவர்களில் ஒருவரெனக் கருதப்படும் கஸ்ரோவின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் காணப்படும் இந்த விபரங்களை விரைவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில்; பகிரங்கப்படுத்த சிறிலங்கா அரசு தரப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனித உரிமை பேரவையில் சிறிலங்கா அரசின்மீதான யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கான அழுத்தங்கன் பிரயோகிக்கப்படுமானால் இந்த விடயங்களை அம்பலப்படுத்துவது என சிறிலங்கா அரசு முடிவு செய்துள்ளது எனவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.