மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட நொச்சிமுனை நாவற்குடா வீதியில் நடமாடிய மர்ம மனிதனை பொதுமக்கள் துரத்திப்பிடித்து கடுமையாக தாக்கியுள்ளனர். இச்சம்பவம் இன்று (13) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மர்ம மனிதன் பிடிபட்டதையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த இராணுவத்தினர் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மீது தடியடிப்பிரயோகம் செய்து மக்களைக்கலைத்தபோது வீதிகளில் டயர்களைப் போட்டு எரித்து பொதுமக்கள் தமது எதிர்ப்பைக் காட்டினர்.
தற்போது அப்பகுதியில் பெருமளவு இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிடிபட்ட மர்ம மனிதர் காத்தான்குடி பொலிஸில் வைக்கப்பட்டு பின் மட்டக்களப்பு நீதிமன்றில் ஆஜர்செய்ததும் அவரை எதிர்வரும் 23ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.