ஐக்கிய தேசியக் கட்சியில் இரண்டாம் நிலைத் தலைவர் பதவி சரத்பொன்சேகாவுக்கு வழங்கப்படும் என்று அண்மையில் அவரைச் சந்திக்கச் சென்ற ரணில் விக்ரமசிங்க வழங்கிய உறுதிமொழியை அடுத்து, சரத் பொன்சேகா ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பிலிருந்து விரைவில் ராஜினாமாச் செய்யவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சரத் பொன்சேகாவுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சில் காணப்பட்ட இணக்கத்தை அடுத்தே அவர் அந்தப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்யவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியில் இரண்டாம் நிலைத் தலைவர் பதவி அவருக்கு வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தினையடுத்தே அவர் இந்தத் தீர்மானத்தை மேற் கொண்டுள்ளார். இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் அவசரமாக சரத் பொன்சேகாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகாவை முதல்வர் வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் நிறுத்துவது குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என அந்தக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சரத் பொன்சேகாவின் துணைவியாரான அனோமா பொன்சேகா, தன்னையோ, தனது கணவரையோ வைத்து அரசியல் லாபம் தேடிக்கொள்ள வேண்டாம் என்றும், தனது கணவரை விடுவிப்பதே தனது ஒரே குறிக்கோள் எனவும் தெரிவித்திருந்தார்.
அத்துடன், கொழும்பு மாநகரசபைக்கான தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஊடகங்களில் தம்மைப்பற்றி வெளிவரும் செய்திகளை நம்பவேண்டாம் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.