Saturday, August 13, 2011

சனல்4 காணொளியை உலக நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவிடுவதால் அதற்க்கான பதில் அறிக்கையை அவசர அவசரமாக 50 நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது சிறிலங்கா.

சனல்4 ஊடகத்தினால் வெளியிடப்பட்ட காணொளிக்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையஜனை 50 நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. வெளிவிவகார அமைச்சினால் இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உயர்ஸ்தானிகராலயங்கள், தூதுவராலயங்கள் மற்றும் கொன்சோல் காரியாலயங்கள் உள்ள நாடுகளில் இந்த அறிக்கை அல்லது வீடியோ காட்சிகளை பார்வையிட முடியும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

சனல்4 காணொளிக்கான பதில் காணொளி அண்மையில் தாய்லாந்தின் பாங்கொக் நகரில் காட்சிப்படுத்தப்பட்டது. உலகின் ஏனைய நாடுகளிலும் குறித்த காணொளியை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.