நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தனக்கு ஏற்பட்ட படு தோல்வி பொறுக்க மாட்டாத ஆளும் தரப்பு இத்தாக்குதல் மூலம் வஞ்சம் தீர்க்கப் பார்க்கிறது என்று உதயன் பத்திரிகை ஊடகர் குகா மீதான தாக்குதலைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழர்களின் நலனுக்காக தொடர்ந்து களமாடிவரும் பத்திரிக்கைகளில் ஒன்றான யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் செய்தியாசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் கடந்த வெள்ளிக்கிழமை அலுவலகத்தில் பணி முடித்துக்கொண்டு தனது வீட்டிற்குத் திரும்பிய பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இவர் மீது கொலைவெறித்தாக்குதல் நட்த்தியுள்ளனர்.
தற்பொழுது உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் பத்திரிக்கை சுத்ந்திரத்தின் குரல்வளையை முற்று முழுதாக நெரிக்கப்பட்டுள்ளது.
இவர் மீது நட்த்தப்பட்ட தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சி தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. சிங்கள இன வெறி ராஜபக்ஷேவின் ஆட்சியில் தமிழர்களின் உரிமைக்காகவும் அவர்களின் குரலை யார் எதிரொலித்தாலும் எந்த வழியில் எவரொருவர் போராடினாலும் அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் உயிருக்கு சிறிதும் பாதுகாப்பு கிடையாது என்பது மற்றுமொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தனக்கு ஏற்பட்ட படு தோல்வி பொறுக்க மாட்டாத ஆளும் தரப்பு இத்தாக்குதல் மூலம் வஞ்சம் தீர்க்கப் பார்க்கிறது.
இதுவரை உண்மைகளை வெளிக்கொணர்ந்த எத்தனையோ பத்திரிக்கையாளர்கள் ராஜபக்ஷேவின் ஆட்சியில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர், கொலைவெறித்தாக்குதலுக்கு இரையாகியுள்ளனர், அவர்களின் உடைமைகள் தாக்கப்பட்டுள்ளனர், ஆனால் சிங்கள இனவெறி அரசோ உலகின் பார்வையில் இருந்து தப்பிப்பதற்காக விசாரணை என்ற பெயரில் சிலரைக் கைது செய்து நாடகமாடியிருக்கிறது. பசப்பலான வார்த்தைகளுடன் கண் துடைப்பு அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறது.
ஆனாலும் எவரொருவரும் இதுவரை தண்டிக்கப்ப்ட்டது இல்லை. உண்மைகளை உரத்துக்கூறிய லசந்த போன்றொருக்கு துப்பாக்கி குண்டுகளைப் பரிசளித்த சிங்கள இனவாதம், ஜெயப்பிரகாஷூக்கு 20 ஆண்டுச் சிறையைப் பரிசளித்த இனவாதம் தற்பொழுது குகநாதன் மீதும் அதைப்போல கொலைவெறித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இப்படியான தாக்குதலை அரசே திட்டமிட்டு மறைமுகமாக ஆயுதக்குழுக்கள் வைத்து இயக்குகிறது.
ஆப்கன் பூமியிலும் ,ஈராக் கிலும் கூட பத்திரிக்கையாளர்கல் தங்கல் பணிகளைச் செய்ய முடிகின்ற பொழுது சிங்கள இனவாதம் கொடுங்கோள் ஆட்சி செய்யும் ராஜபக்ஷேவின் பூமியில் அதற்கு சிறிதும் வாய்ப்பு இல்லை என்பது மற்றுமொரு முறை நிரூபிக்கப் பட்டுள்லது.
இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவித்தும் அடங்காத ராஜபக்ஷேவின் இனப்பாசிசம் இன்னும் தனது தமிழர் மீதான வேட்டையைத் தொடருகிறது,ரத்த வெறியுடன்.இஅதற்கு இப்பொழுது பத்திரிக்கையாளர் குகனாதன் இரையாகியிருக்கிறார்.ஆனாலும் இன்னும் உலகின் செவிட்டுக் காதுகளுக்கும் குருட்டுக்கண்களூக்கும் தெரியவில்லை.
அதனால் தான் ராஜபக்ஷே தனது வெறியாட்ட்த்தை தொடருகிறார்.ஆகவே நாமும் தொடர்ந்து சிங்கள இனவாதத்துக்கு எதிரான போராட்ட்த்தை தொடர்வோம் என்று உறுதி ஏற்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.